×

ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதிக்கு சீனாவின் நாணயத்தில் பணம் கொடுப்பது ஏன்?ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: ரஷ்யாவில் இருந்து மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு சீனாவின் நாணயமான யுவானில் பணம் கொடுப்பது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. டெல்லியில் நேற்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப் கூறியதாவது: இந்தியா தனது மொத்த எண்ணெய் தேவையில் 42 சதவீதத்தை சீனாவின் யுவானில் பணம் செலுத்தி ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதனால் சீன நாணயமான யுவா யுவானை ‘உலகளாவிய கரன்சி’யாக இந்தியா மாற்றுகிறது. நாம் ஏன் நமது நாணயமான இந்திய ரூபாயில் ரஷ்யாவுக்கு பணம் செலுத்தவில்லை என்பதுதான் கேள்வி.

இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு யுவானில் ஏன் பணம் செலுத்துகிறார்கள்? ஏன் சீன நாணயத்தை சர்வதேசமயமாக்க முயற்சிக்கிறோம்? ஏன் அதே தொகையை இந்திய ரூபாயில் நம்மால் செலுத்த முடியாது? மேலும் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படும் மலிவான எண்ணெயின் பலனை, நமது நாட்டின் நுகர்வோர் பெறாதது ஏன்? கடந்த ஒன்பது ஆண்டுகளில், ரூபாயில் பணம் செலுத்த முடியாத அளவுக்கு, இந்திய ரூபாயின் நம்பகத்தன்மை ஏன் குறைந்துள்ளது? உலக அரங்கில் சீனாவின் நாணயம் ஏன் நிறுவப்படுகிறது?.

2020-21ம் ஆண்டில், நாங்கள் ரஷ்யாவிலிருந்து ரூ. 7,000 கோடிக்கு எண்ணெய் வாங்கினோம். இப்போது 2022-23ல் ரூ. 89,000 கோடிக்கு எண்ணெய் வாங்குகிறோம். இந்த எண்ணிக்கை 2021-22ல் இருந்ததை விட 300 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு காங்கிரஸ் குற்றச்சாட்டியது.

The post ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதிக்கு சீனாவின் நாணயத்தில் பணம் கொடுப்பது ஏன்?ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Russia ,China ,State ,the Union ,New Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED இந்திய தேர்தலில் தலையீடா? ரஷ்யா புகாருக்கு அமெரிக்கா மறுப்பு